சேப்பாக்கத்தில் களமிறங்கிய `மெர்சல்'

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் டீசர் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியின் போது ஆடுகளத்தில் மெர்சல் விளம்பரம் போடப்பட்டது.
சேப்பாக்கத்தில் களமிறங்கிய `மெர்சல்'
Published on

மூன்று கதாபாத்திரத்தில் விஜய் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசர் வருகிற 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுஒருபுறம் இருக்க, மெர்சல் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன்னதாக `மெர்சல்' எமோஜி, மெர்சல் டிரேட்மார்க் என தமிழ் சினிமாவில் புது வகையில் விளம்பரத்தை ஆரம்பித்துள்ள நிலையில், சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது மெர்சல் அரசன் வாரான் என்ற டீசர் ரிலீஸ் தேதியுடனான வீடியோவும் வெளியிடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com