புதிய மைல்கல்லை தொட்ட `மெர்சல்'

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் பாடல்கள் புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது.
புதிய மைல்கல்லை தொட்ட `மெர்சல்'
Published on

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் `ஆளப்போறான் தமிழன்', `நீதானே', `மெர்சல் அரசன்', `மாச்சோ' உள்ளிட்ட பாடல்களின், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் `ஆளப்போறான் தமிழன்' பாடல் வரிகள் அடங்கிய வீடியோவை 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். `மெர்சல்' படத்திற்கு இது ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

`மெர்சல்' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.        

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com