விஜய்யின் `மெர்சல்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் `மெர்சல்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டீசர் அட்லியின் பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த அறிவிப்பு வெளியானது முதல் `மெர்சல்' டீசர் என்ற ஹேஷ் டேக்குடன் விஜய் ரசிகர்கள் `மெர்சல்' படத்தை டிரெண்டாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com