விஜய்யின் `மெர்சல்' படைத்த புதிய சாதனை

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் `மெர்சல்' படத்தின் டீசர் `கபாலி' படத்தின் டீசர் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
விஜய்யின் `மெர்சல்' படைத்த புதிய சாதனை
Published on

அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ‘மெர்சல்’ படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இந்த படத்தின் வசூல் 200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரில் ‘மெர்சல்’ படம் வெளியானது. அங்கும் வசூலில் சாதனை படைத்துள்ளது.

விஜய் படங்களில் ‘மெர்சல்’ பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் படத்தின் வெற்றியை படக்குழுவினர் வெளிநாடுகளில் கொண்டாடி வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க மெர்சல் படத்தின் டீசர் புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது. மேலும் கபாலி படத்தின் டீசர் சாதனையையும் மெர்சல் முறியடித்துள்ளது. கபாலி டீசர் இதுவரை 34,582,207 பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், மெர்சல் டீசர் 34,605,562 பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com