மெர்சல் படத்தின் சென்சார் ரிசல்ட்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படத்தின் சென்சார் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சல் படத்தின் சென்சார் ரிசல்ட்
Published on
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களையும், அதிக லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. விஜய்யின் முந்தைய படங்களை விட அதிகப் பொருட்செலவில் உருவாகியுள்ளதால், இதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் சொந்தமாகவே வெளியிட முடிவு செய்துள்ளது.

படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது பணிகள் முடிந்து, படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதனால் படத்தை தீபாவளி தினமான அக்டோபர் 18-ம் தேதி வெளியிடுவது உறுதி என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Maalai Malar
www.maalaimalar.com