ஹலோ டியர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

மலையாளத்தில் உருவாகும் ஒரு புதிய காதல் நகைச்சுவை திரைப்படம்
Hello Dear movie
Published on: 

நடிகர்-எழுத்தாளரான டினாய் பாலோஸ்ன் முதல் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் ஹலோ டியர்.இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

ரிலீஸ் தேதி அறிவிப்பு

மமிதா பைஜு மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரவிருக்கும் காதல் நகைச்சுவைத் சினிமா'ஹலோ டியர் ' இத்திரைப்படம் 2027 ஜனவரி 29 அன்று திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இயக்கத்தில்

நடிகர்-எழுத்தாளரான டினாய் பாலோஸ்ஸின் முதல் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் ஹலோ டியர். இவர், 2019-ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமான தண்ணீர் மத்தன் தினங்கள்'படத்திற்கு இணைந்து திரைக்கதை எழுதியதுடன் ,பத்ரோசின்டே படப்புக்கள் மற்றும் விசுதா மேஜோ ஆகிய படங்களுக்குத் திரைக்கதை எழுதி, அதில் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

இப்படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்க இயக்குநர் அருண் டி ஜோஸ் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.இப்படத்திற்கு அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவும், சமன் சக்கோ படத்தொகுப்பும், கோவிந்த் வசந்தா இசையும் அமைத்துள்ளனர்.

வெற்றி ஓட்டத்தில் மமிதா

விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் பெத்லஹேம் குடும்பா யூனிட் போன்ற தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் படங்களின் வெற்றிக்கரமான ஓட்டத்தில் இருக்கிறார் மமிதா. இந்த நிலையில் இந்த புதிய எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுதியாக எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com