கோவா கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையாள நடிகர்

மலையாள திரையுலகில் இளம் நடிகராக வலம் வந்த சித்து, கோவா கடற்கரையில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.
கோவா கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையாள நடிகர்
Published on: 

மலையாள பட உலகின் இளம் நடிகர் சித்து ஆர்.பிள்ளை. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். இவர் பிரபல மலையாள தயாரிப்பாளர் பி.கே.ஆர்.பிள்ளையின் மகன் ஆவார். 2012-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘செகன்ட் ஷோ’ படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ளார். சித்திரம், வந்தனம் உள்பட 16-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

27 வயதாகும் சித்து ஓய்வுக்காக கோவா சென்று இருந்தார். அங்கு கடற்கரையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலில் மூழ்கி இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

சித்துவின் மரணம் மலையாள பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்-நடிகைகள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com