20 வருடத்திற்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மதுபாலா

ரோஜா, அழகன், ஜென்டில்மேன் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மதுபாலா, 20 வருடத்திற்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். #Madhubala
20 வருடத்திற்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மதுபாலா
Published on

கன்னட திரையுலகத்திலிருந்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் புதுமுக இயக்குநர் ஹரி சந்தோஷ். இவர் கன்னடத்தில் இயக்கிய காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கை அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோரைக் கொண்டு எடுக்க உள்ளார்.

இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் அக்னிதேவி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ள மதுபாலா நடிக்க உள்ளார். இப்படத்தின் துவக்கவிழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் பிரபு பேசும்போது, ’கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கியுள்ள ஹரி சந்தோஷ், கர்நாடக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். எனக்கும் அறிமுக இயக்குநருக்கும் ரொம்ப ராசி. இதுவரை 81 புதுமுக இயக்குநரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறோம்“ என்றார்.

படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் மதுபாலா பேசும்போது ’ரோஜா, அழகன், ஜென்டில்மேன் அப்படின்னு தமிழ் சினிமா எனக்கு நிறைய பேர் வாங்கிக் கொடுத்திருக்கு. தமிழ் படத்துல வாய்ப்பு கிடைக்குறது ரொம்ப அதிர்ஷ்டம்.

பிரபு சார் இருக்காங்கன்னு சொன்ன உடனே 20 வரு‌ஷத்துக்குப் பிறகு பிரபு சாரோட இந்தப் படத்துல நடிக்கப் போறோம்னு சந்தோ‌ஷத்துல இருந்தேன். பாஞ்சாலங்குறிச்சி பட ஷூட்டிங் நேரத்துல பொள்ளாச்சில என்னை, தன் குடும்பத்துல ஒருத்தரா தங்கை மாதிரி பார்த்துக்கொண்டார். எல்லோரும் அவரைப்பத்தி இவ்வளவு நல்லபடியா பேசுறாங்கனா அதுக்கு அவரோட பண்புதான் காரணம். 20 வருடத்துக்குப் பிறகும் அதேமாதிரி இருக்கார்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com