அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார். #Khushbu
அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு
Published on

பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஒரு பேச்சு எழுந்தது. இதுபற்றி குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு, ‘ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்கக் கூடாது. வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழ் பேசி ஆடிப்பாடி சிரித்து, அழுதுபுரண்டு நடித்ததை வியந்து பார்த்தனர். 

அந்த அளவுக்கு டைரக்டர் வாசு சார் சின்னத்தம்பி நந்தினி கதாபாத்திரத்தை செதுக்கி உருவாக்கி இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுக்க முழுக்க நந்தினி தோளில் சுமத்தப்பட்டது. இன்னொரு முக்கியமான வி‌ஷயம் வேறு எந்த ஹீரோக்கள் நடித்து இருந்தாலும் என்னை அந்த அளவுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்கள். பிரபு சார் அவரது ஹீரோயிசத்தை பெருந்தன்மையாகக் குறைத்துக்கொண்டார். 

நான் நடித்த நந்தினி கேரக்டரை எந்த நடிகையும் நடிக்கலாம். ஆனால், பிரபு சார், மனோரமா ஆச்சி நடித்த கேரக்டர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள்...?’. இவ்வாறு குஷ்பு கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com