`2.0' தள்ளிப்போனதால் சாய் பல்லவியை களமிறக்க லைகா திட்டம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருக்கும் நிலையில், அந்த இடத்தை சாய்பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் `கரு' படம் நிரப்பும் என்று கூறப்படுகிறது.
Published on

இந்த படத்தின் அதிநவீன கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸாகும் என்ற அறிவிக்கபட்டிருந்த இந்த படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாய் பல்லவியின் முதல் தமிழ் படமாக உருவாகி வரும் `கரு' படத்தை ஜனவரி 26-ல் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com