

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது திரைப்படம் ‘டோரதி’. இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
90-களில் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலவும் சாதிய நிகழ்வுகள், வன்முறை, நச்சு ஆண்மை குணம் ஆகியவற்றிற்கு இடையே வளரும் இரு நண்பர்களின் கதையை இத்திரைப்படம் மையமாக கொண்டுள்ளது.
நண்பர்கள் இருவரின் வாழ்க்கையில் டோரதி என்ற பெண் கதாப்பாத்திரம் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை இந்த டிரெய்லர் விறுவிறுப்பாக காட்டியிருக்கிறது.
இத்திரைப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து தம்மம் ஃபிலிம்ஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் படத்தை தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் டோரதி திரைப்படமானது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சென்டர்பீஸ் பிரிவில் திரையிடப்பட்டு வாழ்த்துகளை பெற்றிருந்தது.
இதன் மூலம் கார்த்திக் சுப்பராஜின் படைப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
டோரதி திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். டோரதி திரைப்படம் மூலம் இளையராஜா இசையமைக்கும் 1540 வது படமாக டோரதி அமைந்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் கல்யாண விருந்து மற்றும் முத்துமணி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்க்கு இடையே வரும் செப்.25ம் தேதி திரையில் வெளியாகிறது.