பேட்ட ரசிகர்களின் இதயங்களை வெல்லும் - கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘பேட்ட’ படம் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என நம்புவதாக கார்த்திக் சுப்புராஜ் கூறினார். #Petta #Rajinikanth
பேட்ட ரசிகர்களின் இதயங்களை வெல்லும் - கார்த்திக் சுப்புராஜ்
Published on

ரஜினியின் ‘பேட்ட’ படம் ஜனவரி 10-ந் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. தெலுங்கிலும் ஜனவரி 10-ம் தேதியே வெளியிடப்படுகிறது. இதையடுத்து அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.

அப்போது ‘பேட்ட’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது:- ‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள். தலைவரின் ரசிகர்கள், மற்றவர்கள் என அனைவருக்கும் இந்தப் படம் ஒரு விருந்தாக இருக்கும். குடும்பப் பின்னணியில் வலுவான கதை இருக்கும் படம் பேட்ட.

தலைவர் பாணியில் நிறைய ஆக்‌‌ஷன், படத்தில் இருக்கிறது. இது பண்டிக்கைக்கான படம். இந்தப் படத்தையும் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன். சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாவது இன்னும் அந்த மனநிலையை உற்சாகமாக்கும்.

அதே நாளில் இன்னும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் (வினய விதேய ராமா மற்றும் என் டி ஆர் பயோபிக்) வெளியாவது கடுமையான போட்டி என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நம்புபவன் நான். அதனால், பேட்ட அதற்கான ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் என நான் நம்புகிறேன்’ இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். #Petta #Rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com