ரஜினி படத்தில் அந்த நடிகரா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் குறித்து பரவிய வதந்திக்கு கார்த்திக் சுப்புராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Rajinikanth
ரஜினி படத்தில் அந்த நடிகரா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்
Published on

நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கடந்த 10-ந் தேதி சென்னை வந்தடைந்தார். 

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் நிலையில், படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் ரஜினியின் நண்பராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மறுத்துள்ளதுடன், ”படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் பகத் பாசில் இணையவுள்ளார் என்பது பொய்யான தகவலாகும். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பாபி சிம்ஹா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர்” என்று கூறியுள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com