அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை

தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்திருக்கும் கமல்ஹாசன் அவரது அரசியல் பிரவேசம் குறித்து சென்னையில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை
Published on

மேலும் தீவிர அரசியலில் விரைவில் குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சராகி தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஆசை என்றும் அறிவித்திருந்தார்.

அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சி என பல இடங்களில் தனது அரசியல் பிரவேசம் பற்றி பேசி வந்த கமல் ஆளுங்கட்சியை கடுமையாக சாடி வந்தார்.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாக பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com