ஜானி

வெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானி’ படத்தின் முன்னோட்டம். #Johnny #Prashanth #SanchitaShetty
ஜானி
Published on

ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் படம் ‘ஜானி’.

பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இதில், பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த ராஜ், அஸ்தோ ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, ஜெயக்குமார், கலைராணி, சங்கர், சுரேஷ், டி.வி.புகழ் சந்தியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - எம்.வி. பன்னீர் செல்வம், இசை - ஜெய்கணேஷ், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், படத்தொகுப்பு - சிவசரவணன், கலை - மிலன் பர்னாண்டஸ், தயாரிப்பு நிறுவனம் - ஸ்டார் மூவிஸ், தயாரிப்பு - தியகராஜன்,  இயக்கம் - வெற்றி செல்வன்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

“இது ரஜினி பட தலைப்பு. ஆனால், ஆக்‌ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் கதை. சுவையான திருப்பங்களுடன் செல்லும் பிரபு வேடம் பேசப்படும். கலகலப்பான பாத்திரத்தில் ஆனந்தராஜ் நடித்திருக்கிறார். சாயாஜி ஷிண்டே சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருக்கிறார்.

‘ஜானி’ விறுவிறுப்பான அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிவரும் இந்த படம் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் கொண்டதாக இருக்கும்” என்றார். இதன் 3 கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், பெங்களூரில் நடந்து முடிந்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் ‘ஜானி’யை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். #Johnny #Prashanth #SanchitaShetty

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com