ஜெய் - அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் `பலூன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பலூன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய் - அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் `பலூன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின்னர் ஜெய் - அஞ்சலி மீண்டும் இணைந்து நடித்திருப்பதால் பலூன் படத்தின் மீதான எதிர்பாரப்பு கூடியிருக்கிறது. இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

'70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் 'பலூன்' படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என்று ஆரா சினிமாஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜன் பேசுகையில், '' 'பலூன்' நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு  மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். பண்டிகை வாரமான செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று 'பலூன்' படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் என்றுமே பேராதரவு தந்துள்ளனர். நல்ல கதையையும் அதற்கு சரியான அங்கீகாரத்தை தரும் ரசிகர்களையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட 'பலூன்' நிச்சயம் வெற்றி பெரும் என உறுதியாக நம்புகிறேன்.''

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com