விஜய்யின் `மெர்சல்' விநியோக உரிமையை கைப்பற்றிய படநிறுவனம்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் உரிமையை பிரபல பட நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.
விஜய்யின் `மெர்சல்' விநியோக உரிமையை கைப்பற்றிய படநிறுவனம்
Published on

விஜய் ஜோடியாக இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீசாக இருக்கும் இப்படத்தை, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கான விநியோக உரிமையை எம்.கே.எஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனமே அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இறுதிகட்ட படப்படிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com