சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 15 படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் ஒருவரின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்
Published on

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதுதவிர ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

அதேநேரத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் எஸ்.கே.15 படப்பிடிப்பிலும் விரைவில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் கல்யாணி நடிப்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்யாணி பிரியதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் `ரா' கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் `வான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan

X

Maalai Malar
www.maalaimalar.com