'சரவணன் இருக்க பயமேன்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தளபதி பிரபு இயக்கத்தில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற படத்திலும், கெளரவ் இயக்கத்தில் ‘இப்படை வெல்லும்’ படத்திலும் நடித்து வந்தார் உதயநிதி. இதில் பொதுவாக எம்மனசு தங்கம்’ சமீபத்தில் வெளியானது.
‘இப்படை வெல்லும்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளையும் முடித்து, தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கிறது.