என் படத்தை நானே பார்க்க மாட்டேன்: ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தை, அவரே பார்க்க மாட்டார் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
என் படத்தை நானே பார்க்க மாட்டேன்: ஆண்ட்ரியா
Published on
சித்தார்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'அவள்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். மேலும் சுரேஷ், அதுல் குல்கர்னி, அனிஷா விக்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 'ஜில் ஜங் ஜக்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார் சித்தார்த்.

'அவள்' என பெயரிட்டுள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் தயாராகியுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படத்தை மிலிண்ட் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் ஆண்ட்ரியா பேசும்போது, ‘வித்தியாசமான கதைகள் என்னைத் தேடி தேடி வருகிறது. கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. இருந்தாலும் பல விஷயங்கள் கற்றுக் கொண்டு வருகிறேன். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குனர் மிலிண்ட் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி. இந்த படத்தை நானே பார்க்க மாட்டேன். இது போன்று படங்களை பார்க்க எனக்கு ரொம்ப பயம். ஆனால், இந்த படத்தை ரொம்ப பயப்படுமளவிற்கு எடுத்திருக்கிறார்கள். கோலிவுட்டில் இந்த மாதிரி படம் வந்ததில்லை. டெக்னிக்கல் அளவில் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com