நடிகைகளுடனான கிசு கிசு பற்றி பெரிதாக நினைப்பது இல்லை: உதயநிதி ஸ்டாலின்

நடிகைகளுடனான கிசு கிசு பற்றி பெரிதாக நினைப்பது இல்லை: உதயநிதி ஸ்டாலின்

நடிகைகளுடன் இணைத்து பேசும் கிசு கிசு பற்றி தான் பெரிதாக நினைப்பது இல்லை என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
Published on

இது பற்றி கூறிய உதயநிதி ஸ்டாலின்...

“நான் முதன் முதலாக நடித்திருக்கும் கிராமத்து கதை ‘பொதுவாக என் மனசு தங்கம்’. இது சமூகத்துக்கு தேவையான விழிப்புணர்வை சொல்லும் படம். வேறு நிறுவனத்தில் நான் நடித்திருக்கும் முதல் படமும் இதுதான்.

ஊருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிற வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். வில்லனாக பார்த்திபன் நடித்திருக்கிறார். இருவருக்கும் நீயா? நானா? என்ற போட்டி இருக்கும். இதில் கதாநாயகி நிவேதா பெத்துராஜ், கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். என் கூடவே வரும் நண்பராக ‘டைகர் பாண்டி’ என்ற வேடத்தில் சூரி நடித்திருக்கிறார். இதுவரை நான் நடித்த படங்களில் இது மாறுபட்ட படம்.

பல கதாநாயகிகளுடன் நடித்திருக்கிறேன். அவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தது இயக்குனர்கள் தான். நான் எதையும் முடிவு செய்வதில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com