ரஜினியும், ரஞ்சித்தும் தமிழ் கற்றுக்கொடுத்தார்கள் - ஹூமா குரேஷி

காலா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த ஹூமா குரேஷி ரஜினிகாந்த்தும், ரஞ்சித்தும் தமிழ் கற்றுக் கொடுத்ததாக கூறினார். #HumaQureshi
ரஜினியும், ரஞ்சித்தும் தமிழ் கற்றுக்கொடுத்தார்கள் - ஹூமா குரேஷி
Published on

காலா படத்தில் ரஜினியின் காதலியாக வந்து கவர்ந்தவர் இந்தி நடிகை ஹூமா குரேஷி. அவர் அளித்த பேட்டியில் இருந்து...

டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்துப் பொண்ணு நான். அப்பா சலீம் குரேஷி டெல்லியில் நிறைய ரெஸ்டாரன்ட்களை நடத்திட்டிருக்கார். அம்மா அமீனா குரேஷி குடும்பத்தலைவி. 2008ல் படிப்பு முடிந்ததும் சினிமாவில் நடிக்கணும்ங்கிற கனவோட மும்பை வந்தேன். விளம்பரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். 2012ல் அனுராக் காஷ்யப் இயக்கத்தில ‘கேங்ஸ் ஆஃப் வாசிபூர்’ படத்துல் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ‘கேங்ஸ் ஆஃப் வாஸிபூர்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டாங்க. கூடவே நிறைய இந்திய சினிமா விருதுகளையும் அந்தப் படம் வாங்குச்சு. எனக்கும் பிலிம் பேரின் ‘சிறந்த புதுமுக நடிகை’ விருது கிடைச்சுச்சு. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரைக்கும் என்னோட முதல் படம் ‘வொயிட்’. இந்த மலையாளப் படத்தில் மம்மூட்டி சாரோட சேர்ந்து நடிச்சேன். ‘வைசிராய்ஸ் ஹவுஸ்’ங்கிற ஆங்கிலப் படத்திலும் நடிச்சிருக்கேன்.”

சினிமா தவிர வேறு என்ன பிடிக்கும்?

சமையல், டிராவல் ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கேயுமே போக நேரம் கிடைக்கலைனா பீச்சுக்குப் போவேன். ‘காலா’ படத்தோட சில காட்சிகளை சென்னையில எடுத்தப்போ, அடிக்கடி பீச்சுக்குப் போயிட்டு வர்றதை வழக்கமா வெச்சிருந்தேன்.

மொழி என்னைக்குமே நடிப்புக்குத் தடையா இருந்ததில்லை. ரஞ்சித் சாரும், ரஜினி சாரும் சேர்ந்து எனக்குத் தமிழ் கத்துக்கொடுத்தாங்க. மம்மூட்டி சாருடன் வேலை பார்க்கும்போது, அவர் எனக்கு மலையாளம் கத்துக்கொடுத்தார். நிறைய மொழிகளைக் கத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பதான் சரிவர உணர்ச்சிகளைத் திரையில் வெளிப்படுத்த முடியும்.

இந்தியில் ஒரு நடிகைன்னா தோல் நிறத்துல ஆரம்பிச்சு உயரம் வரைக்கும் ‘இப்படித்தான் இருக்கணும்’னு நிறைய விதிமுறைகள் இருக்கு. ஆனா, தமிழ் சினிமா அப்படி இல்லை. நிஜ கதாபாத்திரங்களைத் திரையில காட்டணும்னு நெனைக்கிறாங்க. அதனாலதான் வர்த்தக நோக்கத்தையும் தாண்டி, தென்னிந்திய சினிமா ஒரு படி மேல இருக்கு. அந்த வகையில் நயன்தாரா ரொம்பப் பிடிக்கும். #HumaQureshi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com