சிம்பு கூட்டணியில் இணைந்த ஹரிஷ் கல்யாண்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமாகி இருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகர் சிம்புவின் படத்தில் அவருடன் இணைந்திருக்கிறார்.
சிம்பு கூட்டணியில் இணைந்த ஹரிஷ் கல்யாண்
Published on

அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணமாகவே இருக்கின்றன. பிக்பாஸ் போட்டியாளர்களில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகர்களுள் ஒருவர் தான் ஹரிஷ் கல்யாண். அவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான ரைசாவும் `கிரகணம்' படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஹரிஷ் ஒரு போட்டியின் போது சிம்பு போல செய்து அசத்தியிருப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் சிம்புவை நேரில் சந்தித்தார். சிம்பு அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி தொடங்கி இடத்தை மறக்க வேண்டாம் என்ற வாசகத்தை எழுதி அதை பரிசாக வழங்கியிருந்தார் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில், இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகியிருக்கும், சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜா' படத்தின் தொடக்க பாடலை ஹரிஷ் பாடியிருப்பதாக அவரே டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் பாடிய பாடல்கள் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நவம்பர் 14-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com