

அவர் தற்போது பாலா இயக்கத்தில் `நாச்சியார்', சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் `அடங்காதே', பாபா பாஸ்கர் இயக்கத்தில் `குப்பத்து ராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர `ஐங்கரன்', `4ஜி', `100% காதல்', `சர்வம் தாள மயம்' உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார்.
பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் தயாரிப்பில் `செம' என்ற புதிய படத்திலும் ஜ.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.
இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளரான வள்ளிகாந்த் இயக்கியிருக்கிறார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். அர்த்தனா விஜயகுமார் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.