ரஜினிக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, நடிகர் சூரி, சதிஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா மற்றும் புனேவில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக மீண்டும் ஐதரபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் கோபிச்சந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. ஜெயம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த கோபிச்சந்த், தற்போது ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com