தீபாவளி ரேசில் இருந்து பின்வாங்கிய படம்

வரவர தீபாவளி ரிலீசுக்கான படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த ரேசில் இருந்து ஒரு படம் பின்வாங்கி இருக்கிறது.
தீபாவளி ரேசில் இருந்து பின்வாங்கிய படம்
Published on

அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தீபாவளியை ஒட்டி சுசீந்திரன் இயக்கத்தில் `நெஞ்சில் துணிவிருந்தால்', ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் `சொல்லி விடவா', கவுதம் கார்த்திக்கின் `ஹரஹர மகாதேவகி' உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படங்களுக்கு தியேட்டர்களை ஒதுக்கீடு செய்யும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி ரேசில் இருந்து கவுதம் கார்த்திக்கின் `ஹரஹர மகாதேவகி' விலகி இருக்கிறது. மேலும் அந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை விடுமுறை நாளான செப்டம்பர் 29-ல் `ஹரஹர மகாதேவகி' படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com