

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் கலந்துக் கொண்டார். இவர் நடிகை மற்றும் தொகுப்பாளினி நிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் தனது காதல் மனைவியை பிரிந்து இருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் கணேஷ் வெங்கட்ராம் இருந்த போது, பேட்டி கொடுத்த நிஷா, கணேஷ் வெளியே வந்ததும், நாங்கள் இருவரும் ஒரு சுற்றுலா செல்வோம் எனக் கூறியிருந்தார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது. கூறியது போலவே, கணேஷ் வெங்கட்ராமை அழைத்துக்கொண்டு, நியூசிலாந்துக்கு சென்றிருக்கிறார் நிஷா. அங்கு இருவரும் பஞ்சி ஜம்பிங் செய்துள்ளனர். அப்போது, கணேஷ் வெங்கட்ராம், நிஷாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததை புகைப்படமாக தனது டுவிட்டர் பக்கத்தில் நிஷா பதிவிட்டுள்ளார்.