உடற்தகுதி என்பது நீங்கள் பெறும் வாழ்க்கையைப் பற்றியது - ஜோதிகா வெறித்தனம்

”உடற்தகுதி என்பது நீங்கள் இழக்கும் எடையைப் பற்றியது அல்ல, ஆனால் நீங்கள் பெறும் வாழ்க்கையைப் பற்றியது” அவர் செய்யும் வெயிட் லிஃப்டிங், புஷ் அப்ஸ், லவுன்ஞ் ஜம்ப்ஸ், சுவற்றில் தலை கீழாக செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
உடற்தகுதி என்பது நீங்கள் பெறும் வாழ்க்கையைப் பற்றியது - ஜோதிகா வெறித்தனம்
Published on

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கதாநாயகிகள் பட்டியலில் ஜோதிகாவுக்கு தனி இடம் உண்டு. நயன்தாராவுக்கு அடுத்து பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் ஜோதிகா. 1999-ல் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கியவர் ஜோதிகா. விஜய் உடன் நடித்த குஷி படத்திற்கு சிறந்த கதாநாயகிக்கான விருது அவருக்கு கிடைத்தது. பல தமிழ் படங்களில் நடித்த ஜோதிகா அவ்வப்போது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்து வந்தார். கடந்த 25 ஆண்டு கால தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஜோதிகாவும் ஒருவர். அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது அவர் மிகவும் கொலுக்-மொலுக் என்று பப்லியாக இருந்தார்.

அவரின் அடுத்தடுத்த படங்களில் உடல் இடையை குறைத்து நடித்து வந்தார். சமீபத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து 'காதல் தி கோர்' எனும் மலையாள படத்தில் ஜோதிகா நடித்தார். இத்திரைப்படம் அவர்களுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. நீண்ட நாட்கள் கழித்து ஜோதிகாவுக்கு ஒரு நல்ல படம் என்று கூட சொல்லலாம். வரும் மார்ச் 8 ஆம் தேதி அஜய் தேவ்கன், மாதவன், மனோஜ் ஆனந்த், ரிச்சா ப்ரகாஷ் மற்றும் பலர் நடித்து வெளிவர உள்ள சைத்தான் படத்திலும் ஜோதிகா நடித்துள்ளார். இந்நிலையில், ஜோதிகா இன்ஸ்டாகிராமில் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், ஜெய் பீம் திரைபடத்திற்காக வாங்கிய தேசிய விருதுகளின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ஜோதிகா உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டார். வெளியிட்ட சிறிது நேரத்தில் அது வைரலானது. 44 வயதிலும் எப்படி ஒருவரால் இப்படி உடற்பயிற்சி செய்ய முடியும் என்று மக்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவர் செய்யும் வெயிட் லிஃப்டிங், புஷ் அப்ஸ், லவுன்ஞ் ஜம்ப்ஸ், சுவற்றில் தலை கீழாக செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

"உடற்தகுதி என்பது நீங்கள் இழக்கும் எடையைப் பற்றியது அல்ல, ஆனால் நீங்கள் பெறும் வாழ்க்கையைப் பற்றியது" என்றும் அந்த வீடியோவில் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com