

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மலையாளத் திரைப்படமான 'கராத்தே சந்திரன்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோரின் பாவனா ஸ்டுடியோஸ் (Bhavana Studios) நிறுவனம் தங்களின் 8-வது தயாரிப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது.
கடந்த ஆண்டு இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பானது தொடங்கியுள்ளது. ஃபஹத்தின் தொடர்ச்சியான வெற்றிகரமான நடிப்புகள் மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களை சித்தரிப்பதில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
திலீஷ் போத்தனின் இணை இயக்குநராகப் பணியாற்றிய ராய், இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.புகழ்பெற்ற எழுத்தாளர்களான எஸ். ஹரீஷ் மற்றும் வினோய் தாமஸ் இணைந்து இதன் கதையை எழுதியுள்ளனர்.இதற்கு முன்பு ஃபஹத்துடன் வெற்றிகரமான முயற்சிகளில் பணியாற்றியுள்ள பவானா ஸ்டுடியோஸ் தனது எட்டாவது தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது
இத்திரைப்படம் ஒரு அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த ( திரைப்படமாக உருவாகிறது. ப்டத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களாக கோகுல் சுரேஷ் மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோர் நடிக்கின்றனர்இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.