மீண்டும் ரசிகர்களை கவர்ந்த 2.O மேக்கிங் வீடியோ

சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. #2PointO
மீண்டும் ரசிகர்களை கவர்ந்த 2.O மேக்கிங் வீடியோ
Published on

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை நவம்பர் மாதம் 29-ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார். மேலும் இப்படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியானது. இது ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது.

தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. 4வது மேக்கிங் வீடியோவான இதுவும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. #Rajinikanth #2PointO 

X

Maalai Malar
www.maalaimalar.com