ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் இணையும் முக்கிய பிரபலம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth
ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் இணையும் முக்கிய பிரபலம்
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்க இருப்பதாகவும், தொடர்ந்து காசியிலும் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில் இந்த படத்தில் ரஜினியின் நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பகத் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவும், பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

படப்பிடிப்பு இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் நடந்து வருகிறது. ஆனால் படத்தின் கதை முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பது தானாம். அதுவும் ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதை. இதில் கல்லூரியின் பேராசிரியராக ரஜினிகாந்த் நடித்து வருவதாக படக்குழுவில் இருந்து தகவல் வருகிறது.#Rajinikanth #KarthikSubbaraj

X

Maalai Malar
www.maalaimalar.com