புதிய உச்சத்தை தொட்ட ரவுடி பேபி பாடல்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
புதிய உச்சத்தை தொட்ட ரவுடி பேபி பாடல்
Published on

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரவுடி பேபி’  பாடல் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதி யூடிப்பில் வெளியான ‘ரவுடி பேபி’  பாடல், விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடலை முந்தியுள்ளது. ஆளப்போறான் தமிழன் யூடியூப்பில், 9 கோடியே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. ரவுடி பேபி பாடல் தற்போது வரை 9 கோடியே 65 லட்சத்தை தாண்டியுள்ளது. விரைவில் 10 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த வீடியோ பாடலுக்கு 10 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

முன்னதாக, தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் பில்போர்டில் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக ரவுடி பேபி இடம்பிடித்திருந்தது. பில்போர்டின் இந்த வரிசையில் இடம்பெறும் முதல் தமிழ் வீடியோ பாடல் ‘ரவுடி பேபி’ என்பது குறிப்பிடத்தக்கது. 

பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். #RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

ரவுடி பேபி வீடியோ பாடல்:

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com