சிம்புவுடன் இணையும் தனுஷ்

சிம்பு இசையில் உருவாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட இருக்கிறார்.
சிம்புவுடன் இணையும் தனுஷ்
Published on
நடிகராக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். மேலும் விவேக், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை டிசம்பர் 6ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். மேலும் இதன் பாடல்களை தனுஷ் வெளியிட இருப்பதாக சந்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். சிம்பு இசையில் உருவான பாடல்களை தனுஷ் வெளியிடுவது இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
X

Maalai Malar
www.maalaimalar.com