தர்பார் வசூல் நிலவரம் என்ன? - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9-ந் தேதி உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான இப்படம், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் இப்படம் உலகளவில், 4 நாட்களில் 150 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com