கலகலப்புடன் பிறந்த நாள் கொண்டாடிய டான்ஸ் மாஸ்டர் ஷோபி

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஷோபி, தனது பிறந்த நாளை சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் கலகலப்பு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
கலகலப்புடன் பிறந்த நாள் கொண்டாடிய டான்ஸ் மாஸ்டர் ஷோபி
Published on

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஷோபி. இவர் முன்னணி கதாநாயகன் நடிக்கும் பல படத்திற்கு நடனம் அமைத்து வருகிறார். இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கலகலப்பு 2’ படத்தில் நடனம் அமைத்து வருகிறார். இவர் தனது பிறந்த நாளை ‘கலகலப்பு 2’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் படக்குழுவினருடன் டான்ஸ் மாஸ்டர் ஷோபியின் மனைவியும் குழந்தையும் கலந்துக் கொண்டனர்.

`கலகலப்பு-2' படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி, மிர்ச்சி சிவா ஆகியோர் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பு டிசம்பர் தொடக்கத்தில் முடிவடைகிறது. ஜனவரியில் படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு `சங்கமித்ரா' படத்தின் பணிகளை சுந்தர்.சி. தொடங்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com