விண்டேஜ் யுவன் Vibe ல் நேசிப்பாயா படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது

இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
விண்டேஜ் யுவன் Vibe ல்  நேசிப்பாயா படத்தின்  இரண்டாம் பாடல் வெளியானது
Published on

நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பியாவார் ஆகாஷ் முரளி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான `தொலஞ்ச மனசு' என்ற பாடல் யுவன் ஷங்கர் ராஜா குரலில் கடந்த மாதம் வெளியானது. தற்பொழுது படத்தின் அடுத்த பாடலான `சோலோ வயலின்' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பா.விஜய் வரிகளில் ஹரிச்சரண் பாடியுள்ளார்.

திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com