வில்லு பட செய்தியாளர் சந்திப்பில் விஜய் ஏன் ’சைலன்ஸ்’ என கத்தினார்?: ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்

பிரபுதேவா இயக்கிய வில்லு திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
Director Rajkumar Periyasamy explains Vijay's outburst
Published on: 
Summary

தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான வில்லு பட செய்தியாளர் சந்திப்பின் போது, நடிகர் விஜய் ஆக்ரோஷமாக ’சைலன்ஷ்’ என ஏன் கத்தினார் என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.

தெலுங்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் போக்கிரி திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு 2007 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் போக்கிரி என்ற தலைப்பில் வெளியானது.

இதில் கதாநாயகனாக நடிகர் விஜய், கதாநாயகியாக அசின் மற்றும் வில்லனாக பிரகாஷ்ராஜ் மற்றும் காமேடி வேடத்தில் வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் நடிகர் விஜய்க்கு ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதையடுத்து இந்த திரைப்பட குழுவினர் வில்லு என்ற திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்தனர்.

பிரபுதேவா இயக்கிய வில்லு திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய், கதாநாயகியாக நயந்தாரா மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் காமேடி வேடத்தில் வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் விஜயின் முந்தைய படங்களை விட பெரிய அளவில் ஓடவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.

இதையடுத்து வில்லு படத்தின் மீதான விமர்சங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் பிரபுதேவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த விஜய், திடீரென ‘சைலன்ஸ்’ என ஆக்ரோஷமாக கத்தினார். இந்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அதற்கான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பெரியசாமி, வில்லு பட செய்தியாளர் சந்திப்பின்போது நடிகர் விஜய் ஏன் அவ்வாறு கத்தினார் என விளக்கமளித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “செய்தியாளர் சந்திப்பு நடந்த நிகழ்வு ஒரு கல்யாண மண்டபமாக இருந்தது. அப்போது மண்டபத்தில் விழா நடந்து முடிந்து, அங்கிருந்த நாற்காலிகளை மண்டப ஊழியர்கள் அகற்றி கொண்டிருந்தனர்.

அப்போது நாற்காலிகளை அகற்றும் சத்தம் விஜய்க்கு எரிச்சலாக இருந்தது. அந்த சத்தம் மைக்கில் பதிவாகவில்லை, ஆனால் அது செய்தியாளர் சந்திப்பிற்கு இடையூறாக இருந்தது.

இதன் காரணமாக அவர் மண்டப ஊழியர்கள பார்த்து ஆக்ரோஷமாக சைலன்ஸ் என கத்தினார்.

ஆனால் அவர் செய்தியாளர்களிடம் கத்தியதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என கூறினார்.

X