

விஜய்யின் 'திருப்பாச்சி' திரைப்படம் வரும் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பசுபதி, மல்லிகா ஆகியோர் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் திருப்பாச்சி.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பதாகையின்கீழ் ஆர்.பி.சௌத்ரி படத்தை தயாரித்திருந்தார். இப்படம் முன்னதாக அக்.1ம் தேதி மறுவெளியீடாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் டிச.25ம் தேதி வெளியாகும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.