VIDEO- Harry Potter HBO Series: ரசிகர்களைக் கவர்ந்த புதிய டிரெய்லர் வெளியீடு!

முதல் பாகத்தில் வரும் பாத்ரூம் டிரோல் காட்சி, இந்த புதிய பதிப்பில் மிகவும் பயங்கரமாகவும் ஆபத்தானதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
Harry Potter HBO Series
Published on
Summary

டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டுள்ள நீலம் மற்றும் சாம்பல் நிறம் சார்ந்த டார்க் பின்னணி லைட்டிங், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரைப் போன்று இருப்பதாக சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹாரி பாட்டர்' கதையின் புதிய எச்பிஓ (HBO) தொலைக்காட்சித் தொடருக்கான டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான கதையமைப்பைத் தாண்டி, ஹாரி பாட்டரின் பெற்றோர்களான ஜேம்ஸ் மற்றும் லிலியின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய கூடுதல் காட்சிகளை இந்தத் தொடர் வெளிப்படுத்த உள்ளது. அத்துடன் ஹாரி பாட்டர், ரோன் மற்றும் ஹெர்மியோனி ஆகிய முதன்மை கதாபாத்திரங்களில் புதிய இளம் நட்சத்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். முதல் பாகத்தில் வரும் பாத்ரூம் டிரோல் காட்சி, இந்த புதிய பதிப்பில் மிகவும் பயங்கரமாகவும் ஆபத்தானதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

திரைவண்ணம்

டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டுள்ள நீலம் மற்றும் சாம்பல் நிறம் சார்ந்த டார்க் பின்னணி லைட்டிங், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரைப் போன்று இருப்பதாக சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். முதல் பாகத்தின் மாயாஜால உணர்வுக்கு பிரகாசமான வண்ணங்களே பொருத்தமாக இருக்கும் என ஒரு தரப்பும், கதையின் தீவிரத்தன்மைக்கு இந்த இருண்ட வண்ண அமைப்பே சரியானது என மற்றொரு தரப்பும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஜான் லித்கோ, பாப்பா எஸீடு, சாநெட் மொக்டீர் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்தொடர், 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' என்ற தலைப்பில் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் 25 கிறிஸ்மஸ் பண்டிகையன்று எச்பிஓ மேக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com