

கேப்காம் நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’.
டி.ஜே.ஃபிக்ஸ்மேன் எழுதியுள்ள இப்படத்தை கிடாவோ சகுராய் இயக்கியுள்ளார். இப்படத்தை லெஜண்டரி பிக்சர்ஸ் நிறுவனம் கேப்காம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் ஆண்ட்ரூ கோஜி, நோவா சென்டினியோ, காலினா லியாங், ஜேசன் மோமோவா மற்றும் டபிள்யூ.டபிள்யூ.இ புகழ் ரோமன் ரெயின்ஸ் உள்ளிட்ட பல முன்னணி உலகளாவிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைபடத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் ஹாலிவுட் அறிமுகத்தைப் பெறுகிறார் இந்திய நாயகன் வித்யூத் ஜம்வால்.
இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அதில் தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜம்வாலின் சண்டைக் காட்சிகள் இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன.