'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தள வீடியோ வைரல்: நீக்கப்பட்டதா சந்தானத்தின் காட்சிகள்? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

நடிகை வித்யா பாலனின் பிறந்தநாளையொட்டி, படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் சந்தானம் இடம்பெற்றுள்ள காட்சி.
Published on: 
Summary

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தள வீடியோ வைரலாகி, நடிகர் சந்தானத்தின் காட்சிகள் திரையரங்குகளில் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரது காட்சிகள் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன? எதிர்காலத்தில் அந்த காட்சிகள் வெளியிடப்படுமா? என சமூக வலைத்தளங்களில் விவாதம் நடைபெறுகிறது.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஹிருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். படம் வெளியான நாள் முதல் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருவதால், படக்குழுவினரும் ரசிகர்களும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

வீடியோ வைரல்

இதற்கிடையே, ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வித்யா பாலனின் பிறந்தநாளையொட்டி, படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். வித்யா பாலன் கேக் வெட்டி ரஜினிகாந்துக்கு ஊட்டிவிட, அவரும் வித்யா பாலனுக்கு கேக் ஊட்டி மகிழ்கிறார்.

இந்த வைரல் வீடியோவில் நடிகர் சந்தானம் இடம்பெற்றுள்ளதே தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

ரசிகர்கள் கேள்வி

படப்பிடிப்பு தளத்தில் சந்தானம் கலந்துகொண்டிருப்பதால், இப்படத்தில் அவரும் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், திரையரங்குகளில் வெளியான படத்தில் அவரது காட்சிகள் இடம்பெறவில்லை.

படமாக்கப்பட்ட சந்தானத்தின் காட்சிகள் படத்தில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டது ஏன்?", "நீக்கப்பட்ட அந்த நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் அவரது கதாபாத்திரம் தொடர்பான பகுதிகள் எதிர்காலத்தில் வெளியிடப்படுமா?" என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, ‘ஜெயிலர் 2’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல மாலில் கண்டு களித்தார். இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com