ரவுடிகளை வேட்டையாட வருகிறான்.. வைரல் ஆகும் வேட்டையன் டீசர்

வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் இன்று வெளியானது. வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரவுடிகளை வேட்டையாட வருகிறான்.. வைரல் ஆகும் வேட்டையன் டீசர்
Published on

'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழாவில் வைத்து வேட்டையன் படத்தின் பிரீவியூ வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த படத்தின் "மனசிலாயோ" மற்றும் "ஹண்டர் வண்டார்" பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com