ஓடிடி தளத்தில் வெளியாகும் 'வேட்டையன்'.. தேதி அறிவிப்பு

பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார். படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.
ஓடிடி தளத்தில் வெளியாகும் 'வேட்டையன்'.. தேதி அறிவிப்பு
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார். திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.

இந்த நிலையில், ஓடிடி தளத்தில் 'வேட்டையன்' படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த நிலையில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 7-ந்தேதி அமேசான் பிரைம் 'வேட்டையன்' படத்தை ஓடிடியில் வெளியிடுகிறது. டிஜிட்டல் உரிமையை ரூ.90 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com