வேட்டையன் படத்தின் புது அப்டேட் வெளியீடு

இந்த படத்தின் படப்பிடிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
வேட்டையன் படத்தின் புது அப்டேட் வெளியீடு
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகும் புதிய படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் டப்பிங் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக பகத் பாசில் தனது காட்சிகளுக்கு டப்பிங் செய்து வருகிறார். இந்த அக்டோபர் மாதம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com