வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் "ஸ்டார்" படத்தில் நடித்துள்ளார்அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது
வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
Published on

டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் "ஸ்டார்" படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதுபோக நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் ஒரு படத்தில் நடித்து வரும் கவின், நெல்சன் தயாரிப்பில் அவர்து உதவி இயக்குநர் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் கவின் நடிக்கும் 7-வது படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் தயாரிக்க உள்ளாராம். வெற்றிமாறனின் உதவி இயக்குநர் விக்ரனன் அசோகன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com