VIDEO- நடிகர் சூர்யாவின் 'சீன்' பட ட்ரெய்லர் வெளியீடு!

இப்படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை நஸ்ரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்புகிறார்.
Suriya
Published on: 

மலையாளத்தில் மாபெரும் வெற்றிப் படங்களான 'ரோமாஞ்சம்' மற்றும் 'ஆவேஷம்' ஆகிய படங்களை இயக்கிய திறமைமிக்க இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் சூர்யா முற்றிலும் மாறுபட்ட கலகலப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளது ட்ரெய்லர் மூலமாக தெளிவாகியுள்ளது.

இப்படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை நஸ்ரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்புகிறார். இவருடன் இணைந்து வளர்ந்து வரும் இளம் நடிகர் நஸ்லென் மற்றும் அனுபவமிக்க நடிகர்களான லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ழகரம் ஸ்டூடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், எதிர்வரும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

X