இசையமைப்பாளர் தேவா மறைவு- ஆளுநர், குஷ்பு உள்ளிட்டோர் இரங்கல்

'தேனிசைத் தென்றல்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், தேனைப் போன்ற இனிமையான குணமும், காற்றைப் போன்ற கலகலப்பான இயல்பும் கொண்டவர்.
இசையமைப்பாளர் தேவா
Published on: 
Summary

பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் காலமானது தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். ஆளுநர் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தேவாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் இரங்கல்

பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது இனிமையான இசையமைப்பாலும், மறக்க முடியாத பாடல்களாலும் தமிழ் திரையிசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற தேவா அவர்களின் மறைவு, தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் ஆளுநர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறார்.

நடிகை குஷ்பு

இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மிகவும் துயரமான செய்தி. நம்பவே முடியவில்லை. வெறும் 10 நாட்களுக்கு முன்புதான், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும், அனைவரையும் வாழ்த்திக்கொண்டு, எங்களுடன் ஒருவராக இருந்த மனிதர் இன்று நம்மிடையே இல்லை. இது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

'தேனிசைத் தென்றல்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், தேனைப் போன்ற இனிமையான குணமும், காற்றைப் போன்ற கலகலப்பான இயல்பும் கொண்டவர். இசை மற்றும் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

மிகவும் சீக்கிரமாகவே நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். ஏன் இப்படி??

தேவா சார், உங்களை நாங்கள் மிகவும் இழக்கிறோம். உங்கள் ஆன்மா அமைதியடையட்டும் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் மோகன் ஜி

எதுக்கு இவ்வளவு அவசரம் சார்.. தேனிசை தென்றல் இயற்கை எய்தினார்.. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com