‘ஜெயிலர் 2’ படத்தின் 3-ஆவது பாடல் நாளை வெளியீடு!

படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
‘ஜெயிலர் 2’ படத்தின் 3-ஆவது பாடல் நாளை வெளியீடு!
Published on: 

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் மூன்றாவது பாடலான ‘ஒன் நேம்’ நாளை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

படத்தின் முதல் பாடல் அலே போலேலோ, இரண்டாவது பாடல் ஒன் சன் ஒன் மூன் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில், தற்போது மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் சிவராஜ்குமார், வித்யா பாலன், சூரஜ் வெஞ்சரமுடு என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com