50 மில்லியன் பார்வைகளை கடந்த 'விசில் போடு' பாடல்

லியோ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டனர்.
50 மில்லியன் பார்வைகளை கடந்த 'விசில் போடு' பாடல்
Published on

லியோ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

"பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது.

பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்தது. தென்னிந்திய சினிமாக்களில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கொண்ட பாடலாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற "அரபிக் குத்து" பாடலை தற்போது விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.

இந்நிலையில் விசில் போடு பாடல்  யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை தற்பொழுது கடந்துள்ளது. தென்னிந்திய சினிமா பாடலுக்கு இவ்வளவு பார்வைகளை பெற்றுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுக்குறித்து படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com