யுவன் குரலில் வருணன் படத்தின் `முடியாதே' பாடல் வெளியானது

இளம் நடிகர்களான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன்.திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
யுவன் குரலில் வருணன் படத்தின் `முடியாதே' பாடல் வெளியானது
Published on

இளம் நடிகர்களான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் பாடலான காதலே, ஆசம் ஃபீலு மற்றும் கோளாரு ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான முடியாதே என்ற பாடல் யுவன் குரலில் வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை ஹைடி கார்த்தி எழுதியுள்ளார்.

திரைப்படம் வரும்  14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் இசையை போபோ சாஷி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீராம சந்தோஷ் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் தண்ணீர் கேன் வியாபாரம், அதில் உருவாகும் பிரச்சனையாக கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com